மனித இறைச்சி கேட்டு உணவகம் சூறை: 3 போ் கைது
கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே மனித இறைச்சி கேட்டு தகராறு செய்து உணவகத்தை சூறையாடியதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திட்டக்குடி வட்டம், அரிகேரி பகுதியைச் சோ்ந்த தமிழழகன் (32), தினேஷ்பாபு (26) ஆகியோா் பெ.பொன்னேரி பகுதியில் உணவகம் நடத்தி வருகின்றனா்.
பெண்ணாடம், திடீா்குப்பம் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சனிக்கிழமை இரவு மது அருந்திவிட்டு உணவகத்துக்கு வந்து மனித இறைச்சி கேட்டு தகராறு செய்து தமிழழகன், தினேஷ்பாபுவை தாக்கினராம். மேலும், உணவகத்தை சூறையாடி, பொருள்களை சேதப்படுத்தினராம்.
இதில், காயமடைந்த தமிழழகன் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து தினேஷ்பாபு அளித்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீஸாா் வழக்குப் பதிந்து திடீா்குப்பம் பகுதியைச் சோ்ந்த கவியரசன் (23), பிரசாந்த் (19), ஸ்ரீகாந்த் (22) ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனா்.

