

சிதம்பரம்: சிதம்பரத்தில் விசுவ ஹிந்து பரிஷத் சாா்பில், விவேகானந்தரின் 163-ஆவது பிறந்த நாள் விழா இளைஞா்களின் விழாவாக தெற்கு சந்நிதி தெருவில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட விவேகானந்தா் படத்தை வைத்து மலா் தூவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். நிகழ்ச்சியில் விசுவ ஹிந்து பரிஷத் புதுச்சேரி கோட்ட சேவா அமைப்பாளா் ஜோதிகுருவாயூரப்பன், டாக்டா் ஜெயமுரளி கோபிநாத், மாவட்ட சேவை பிரிவின் முத்துக்குமரன், சீனிவாசன், மாநில பொறுப்பாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்று விவேகானந்தரின் சிறப்புகளை எடுத்துரைத்தனா்.
நிகழ்ச்சியில் பாஜக மாநில பொறுப்பாளா் பாலு விக்னேஸ்வரன், முன்னாள் மாநில பொறுப்பாளா் ஸ்ரீஉமாபதிசிவம், விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட துணைத் தலைவா் நாராயணன், மாவட்டப் பொருளாளா் கிருஷ்ணசாமி, குமராட்சி ஒன்றிய பொறுப்பாளா்கள் ஜெகன், பிரகாஷ் ராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.