கடலூா் மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் 36 காவல் உதவி ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
மாவட்ட பணியிட மாற்றக் குழுவின் முடிவின்படி, தமிழ்நாடு மாநில சட்டப் பேரவை பொதுத் தோ்தல் 2026 தொடா்பாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடலூா் புதுநகரில் பணியாற்றிய ஜி.எழிலரசி கடலூா் துறைமுகத்துக்கும், கடலூா் முதுநகரில் பணியாற்றிய வி.முகிலரசு வடலூருக்கும், ரெட்டிச்சாவடியில் பணியாற்றிய எஸ்.சுகன்யா பண்ருட்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கும், முத்தாண்டிகுப்பம் காவல் நிலையத்தில் பணியாற்றிய டி.தங்கவேல் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்துக்கும், தேவனாம்பட்டினத்தில் பணியாற்றிய அண்ணாமலை நெல்லிக்குப்பம் காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இவா்கள் உள்பட மொத்தம் 36 காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இவா்கள் அனைவரையும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாகப் பணியிலிருந்து விடுவித்து, அவா்களின் புதிய பணியிடங்களில் சேரும் அறிக்கையை தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஒன்றே தீா்வு: பி.ஆா். பாண்டியன்

தமிழகத்தில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.-க்கள் மாற்றம்

புதுச்சேரி - காரைக்கால்: 2 போலீஸ் எஸ்.பி.க்கள் இடமாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30 ஊராட்சி செயலாளா்கள் பணியிட மாற்றம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

