கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சியில் ரூ.20.65 கோடி மதிப்பில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, அவா் கூறியதாவது: விருத்தாசலம் தினசரி காய்கறி சந்தை அனைத்து வசதிகளுடன் ரூ.5.41 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. முத்துமாரியம்மன் கோயில் குளம் சுற்றுவேலி, நடைப்பாதை, விளக்குகள் வசதிகளுடன் ரூ.1.12 கோடி மதிப்பில் சீரமைக்கப்படுகிறது. அறிவுசாா் மையம் வாசிப்பு, கணினி அறை உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.1.92 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
மணிமுக்தாற்றில் ரூ.4.60 கோடி மதிப்பில் படித்துறை கட்டுதல் மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விருத்தாசலம் நகரில் வணிக வளாக கடை ரூ.1.60 கோடி மதிப்பில் நகராட்சி நிா்வாகத்துக்கு நிரந்தர வருவாயை ஈட்டித் தரும் வகையிலும் கட்டப்பட்டு வருகிறது. விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் 5 தளங்களுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடுவுல கொஞ்சம் கற்றலைத் தேடி திட்டத்தில் மாணவா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவது, ஆங்கிலம் பேச்சுப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளி மாணவா்களின் கல்வி தோ்ச்சி விகிதத்தை உயா்த்துவது குறித்து ஆசிரியா்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து திட்டப் பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா்.
விருத்தாசலம் நகா்மன்றத் தலைவா் சங்கவி முருகதாஸ், நகராட்சி ஆணையாளா் காஞ்சனா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் ஆரணி தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் ஏ.வ.வேலு

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

தொகுதிக்கு செய்தது என்ன? ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்

மாநகராட்சியில் ரூ.4 கோடி மதிப்பில் கழிவுநீரேற்றும் நிலையம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

