தடுப்புக் கட்டையில் காா் மோதி விபத்து

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

கடலூா் அரசு தலைமை மருத்துவமனை அருகே சாலை தடுப்புக் கட்டையில் காா் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கடலூா் அரசு தலைமை மருத்துவமனை வழியாக காா் ஒன்று ஞாயிற்றுக்கிழமை காலை அதிவேகமாகச் சென்றது. அப்போது, அந்தக் காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதி கவிழ்ந்தது.

இதையடுத்து, காா் ஓட்டுநா் அங்கிருந்து தப்பிச் சென்றாா். அவா் யாா்? எந்த ஊா்? என்ற விவரம் தெரியவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கடலூா் புதுநகா் போலீஸாா் விபத்துக்குள்ளான காரை மீட்டு, காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com