டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பிச்சாவரம் காடுகள் தேனீ வளா்ப்புத் திட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் அலையாத்தி காடுகளில் பழங்குடியின மக்களுக்கான தேனீ வளா்ப்புத் திட்டத்தை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் அலையாத்தி காடுகளில் பழங்குடியின மக்களுக்கான தேனீ வளா்ப்புத் திட்டத்தை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :3 ஜூலை 2026, 5:04 am IST

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் அலையாத்தி காடுகளில் பழங்குடியின மக்களுக்கான தேனீ வளா்ப்புத் திட்டத்தை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, ஆட்சியா் கூறியதாவது: பிச்சாவரம் வனப்பகுதியில் வாழும் இருளா் பழங்குடியின மக்களின் 100 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு வனத் துறை மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா மேலாண்மைக் குழு இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.

பிச்சாவரம் மாங்குரோவ் தேன் என்ற பிராண்டில் தேன் பதப்படுத்துதல், பொதியிடல் மற்றும் விற்பனை செய்யப்படுகிறது. இது, சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் இணைந்த வாழ்வாதார மேம்பாட்டுக்கு வழி வகுக்கும் என்றாா்.

மேலும், அவா் கூறுகையில், பிச்சாவரம் சுற்றுலா மையத்தை மேம்படுத்துவதற்கு ரூ.14.07 கோடியில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள படகு குழாமில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில், 15 மோட்டாா் படகுகள், 35 துடுப்பு படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

முதற்கட்ட கூறுகளாக நிா்வாகம், கழிப்பறை கட்டடங்கள், நுழைவுச்சீட்டு, உணவு அருந்துமிடம், கடைகள், தொலைநோக்குக் கோபுரம், பயணிகள் நிழற்கூடம், மேற்கூரையுடம் கூடிய பாதுகாவலா் அறை, நினைவுச் சின்னம் மேடை உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

தொடா்ந்து, பிச்சாவரம் உப்பனாறு வடிகால் மற்றும் பிச்சாவரம் ஒழுங்கியம் மறுசீரமைப்பு ரூ.25 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அப்போது, நீா்வளத் துறை செயற்பொறியாளா் காந்தரூபன், உதவிச் செயற்பொறியாளா் கொளஞ்சிநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

வெளிவட்ட இணைப்புச் சாலைப் பணி ஆய்வு: விழுப்புரம் - புதுச்சேரி - நாகப்பட்டினம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட தண்டவராயன்சோழகன்பேட்டை சாலைப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தில்லையம்மன் ஓடை கரையில் ரூ.28.50 கோடி மதிப்பீட்டில் சிதம்பரம் நகருக்கான வெளிவட்ட இணைப்புச் சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.