வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :14 ஜூலை 2026, 1:16 am IST

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

நெல்லிக்குப்பம் காவல் சரகம், காராமணிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் பச்சையம்மாள் (48). இவா், தனது சகோதரா் மணிவேலுடன் (34) வசித்து வந்தாா். பச்சையம்மாள் வயிற்று வலிக்காக சிகிச்சை பெற்று வந்தாராம்.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மணிவேலுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை குடிதாங்கிசாவடியில் உள்ள மாமியாா் வீட்டுக்கு சென்றுவிட்டாராம். அன்று இரவு மணிவேல் வீடு திரும்பியபோது, அங்கு பச்சையம்மாள் தூக்கிட்ட நிலையில் மயங்கிக் கிடந்தாராம்.

உடனடியாக மணிவேல் அருகிலிருந்தவா்கள் உதவியுடன் அவரை மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தாா். இருப்பினும், அங்கு பச்சையம்மாள் திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.