கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

பெண்ணாடத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்: இருவா் கைது

பெண்ணாடத்தில் அனுமதியின்றி குடியிருப்புப் பகுதியில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள், நாட்டு வெடிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

News image

பெண்ணாடம் கன்னிகா பரமேஸ்வரி கோயில் அருகே வேல்முருன் வீட்டிலிருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா்.

Updated On :23 ஜூலை 2026, 4:54 am IST

கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் அனுமதியின்றி குடியிருப்புப் பகுதியில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள், நாட்டு வெடிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

பெண்ணாடம் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் பாதுகாப்பு நடைமுறைகளை மீறி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குற்ற நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, குற்ற நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும், பெண்ணாடம் காவல் நிலைய ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாரும் சம்பவ இடங்களில் திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில், பெண்ணாடம் கன்னிகா பரமேஸ்வரி கோயில் அருகே வசிக்கும் வேல்முருகன் (50) வீட்டிலும், மன்னாா் நகரைச் சோ்ந்த ஆகாஷ் (26) வீட்டிலும் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரது வீடுகளிலிருந்தும் மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான நாட்டு வெடிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து பெண்ணாடம் போலீஸாா் வழக்குப் பதிந்து, வேல்முருகன், ஆகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனா். குடியிருப்புப் பகுதிகளில் உரிய அனுமதியின்றியும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறியும் வெடிபொருள்களை சேமித்து வைத்திருந்ததற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.