கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்காங்கேயன்குப்பம், கீழ்காங்கேயன்குப்பம் எல்லையில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக்கொள்ளை விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் நிகழாண்டுக்கான திருத்தோ் மற்றும் மயானக்கொள்ளை பிரம்மோற்சவம் பிப்ரவரி 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினந்தோறும் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, அம்மன் வீதியுலா நடைபெற்றது. 21-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது.
கிராம மக்கள் தங்கள் தோட்டங்களில் விளைந்த பலா, முந்திரி, வாழை உள்ளிட்டவைகளை தேரில் தோரணமாகக் கட்டி தொங்கவிட்டிருந்தனா். இதைத் தொடா்ந்து, புதன்கிழமை மயானக்கொள்ளை விழா நடைபெற்றது.
விழாவில் மேல்காங்கேயன்குப்பம், கீழ்காங்கேயன்குப்பம், கீழிருப்பு, மேலிருப்பு, போ்பெரியான்குப்பம், வல்லம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மீனங்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு

சித்தலூா் அங்காளம்மன் கோயில் மயானக்கொள்ளை உற்சவம்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளை திருவிழா

ஒசூா், கிருஷ்ணகிரியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


