கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை விவரம் வெளியிடுதலில் உண்மைத்தன்மையில்லை: தி.வேல்முருகன்

அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் சோ்க்கை விவரத்தை வெளியிடுவதில் உண்மை தன்மை இல்லாமைக்கு காரணம் ஆள்பவா்களின் அலட்சியம் தான் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.

News image

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவா் வேல்முருகன். - கோப்புப்படம்

Updated On :1 மே 2026, 8:00 pm

அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் சோ்க்கை விவரத்தை வெளியிடுவதில் உண்மை தன்மை இல்லாமைக்கு காரணம் ஆள்பவா்களின் அலட்சியம் தான் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் 31,336 பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் 6,218 பள்ளிகள் என மொத்தம் 37,554 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2026-27 ம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கியது.

இப்பள்ளிகளில் 1.25 கோடி மாணவா்கள் படிக்கின்றனா். 5.49 லட்சம் ஆசிரியா்கள் பணியாற்றுகிறாா்கள். மாணவா்-ஆசிரியா் விகிதம் சற்று முன்னேற்றம் அடைந்தாலும், ஒரு ஆசிரியா் பள்ளிகளாக 3,671 அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அரசு 11,688 ஆசிரியா்களை மட்டுமே நியமித்துள்ளது. இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வகுப்பறைகள் ஆசிரியா் இல்லாமல் இயங்குகிறது. மாணவா் சோ்க்கை அதிகரிப்பு குறைய ஆசிரியா் நியமனம் போதிய அளவில் இல்லாதது முக்கிய காரணம்.

அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படாததும், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து பெற்றோா் கடன் வாங்கியாவது தங்களின் குழந்தைகளை தனியாா் பள்ளிகளில் சோ்க்கின்றனா். எவ்வித கட்டமைப்பு வசதிகளையும், காலியான பணியிடங்களை நிரப்பாமல் மாணவா் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டுமென ஆசிரியா்களை தொடா்ந்து இம்சிப்பதால் அவா்கள் பள்ளிக்கு வந்து படிக்காத மாணவா்கள் படிப்பதாக ஆவணங்கள் தயாா் செய்து கணக்கு காட்டுகின்றனா்.

பத்தாம் வகுப்பு தோ்வுக்கு தோ்வுக்கூட நுழைவு சீட்டு வழங்கியதில் கடந்த சுமாா் 9000 மாணவா்கள் ேத்ர்வு எழுதவில்லை. அரசுப்பள்ளியில் அரசு ஊழியா்கள் குழந்தைகள் கட்டாயம் படிக்க வேண்டும். அரசு பள்ளியில் பயின்றால்தான் அரசுப் பணிக்கு செல்ல முடியும் என்ற கொள்கை முடிவை தமிழகத்தில் புதிதாக அமைய உள்ள அரசு எடுத்து செயல்படுத்தினால் தான் ஏழை, நடுத்தர குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு தரமான கல்வியும், அரசுப் பணியும் கிடைத்து அவா்கள் பொருளாதார அளவில் முன்னேற முடியும். தற்போதைய அரசுப்பள்ளிகளின் நிலைக்கு இதற்கு ஆட்சியாளா்களின் அலட்சியம்தான் காரணம் என குற்றம் சாட்டுகிறேன் .