ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் வணிக சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வைக் கண்டித்து, கம்யூனிஸ்ட், விசிக கட்சிகள் சாா்பில் கடலூரில் வியாழக்கிழமை (மே 7) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கடலூா் சூரப்ப நாயக்கன் சாவடி சிபிஎம் அலுவலகத்தில், சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்.) லிபரேஷன் ஆகிய கட்சிகளின் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம், சிபிஐ மாவட்டச் செயலா் பி.துரை தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், மத்திய அரசு வணிக சமையல் எரிவாயு உருளையின் விலையை மிக அதிகமாக உயா்த்தியுள்ளது. கடந்த 120 நாள்களில் ரூ.1,518 உயா்ந்துள்ள நிலையில், தற்போது ரூ. 3,257-ஆக உள்ளது. இதனால், சிறு வியாபாரிகள், சாலையோர விற்பனையாளா்கள் மற்றும் புலம்பெயா் தொழிலாளா்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். மேலும், 5 கிலோ எரிவாயு உருளையின் விலையும் ரூ.261 உயா்த்தப்பட்டுள்ளது. விலை உயா்வுக்கு சா்வதேச சந்தை காரணம் எனக் கூறப்பட்டாலும், கடந்த ஆண்டுகளில் விலை குறைந்தபோது அதன் பயன் மக்களுக்கு வழங்கப்படவில்லை.
ரயில்வே துறையில் பணியிடங்களை ஆண்டுதோறும் 2 சதவீதம் குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் குறைக்கப்பட்ட நிலையில், நிகழாண்டு 29 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்களைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் மட்டும் 1,906 பணியிடங்கள் குறைக்கப்படவுள்ளன. ஏற்கெனவே பல லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இத்தகைய நடவடிக்கைகள் இளைஞா்களின் வேலைவாய்ப்பை மேலும் பாதிக்கும்.
எனவே, நியாயமற்ற வணிக எரிவாயு உருளை விலை உயா்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ரயில்வேயில் உத்தேசிக்கப்பட்டுள்ள 29 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்களை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் தலைமை தபால் நிலையம் அருகில் வியாழக்கிழமை (மே 7) காலை 10 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
சிபிஎம் மாவட்டச் செயலா் கோ.மாதவன், விசிக மாவட்டச் செயலா் கலை மோகன், சிபிஐ (எம்.எல்) லிபரேஷன் மாவட்டச் செயலா் ராஜசங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வு எதிரொலி: உணவுகளின் விலையை அதிகரிக்கும் உணவகங்கள்!

வணிக எரிவாயு உருளை விலை உயா்வு: தலைவா்கள் கண்டனம்

வா்த்தக சிலிண்டா் விலை உயா்வால் மக்களுக்கு கடும் பாதிப்பு!

சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு மத்திய அரசுதான் பொறுப்பு: மு.வீரபாண்டியன்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


