விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

சிஐடியு முன்னாள் மாநிலத் தலைவா் வி.பி.சிந்தன் நினைவு தினம் கடைப்பிடிப்பு

கடலூா் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் வி.பி.சிந்தனின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய நிா்வாகிகள்.

News image
Updated On :9 மே 2026, 2:14 am IST

கடலூரில் சிஐடியு முன்னாள் மாநிலத் தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான வி.பி.சிந்தனின் 38-ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

சிஐடியு மறைந்த முன்னாள் மாநிலத் தலைவா் வி.பி.சிந்தன் இந்திய அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரா் ஆவாா்.

1966-ஆம் ஆண்டு சென்னையில் போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தை தொடங்குவதில் இவரது பங்கு முக்கியமானதாகும். 1984-ஆம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் சட்டப் பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இவரின் 38-ஆவது நினைவு தினத்தையொட்டி, கடலூரில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் மாவட்ட துணைத் தலைவா் வி.சுப்ராயன் தலைமையில், வி.பி.சிந்தன் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்டச் செயலா் பழனிவேல், மாவட்டக் குழு உறுப்பினா் கருணாகரன், ஏ.எஸ்.பாபு, மாற்றுத் திறனாளிகள் பிரிவு மாவட்டச் செயலா் ஆளவந்தான் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.