தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பாடலீசுவரா் கோயில் பந்தக்கால் முகூா்த்தம்: வைகாசி பெருவிழா மே 22 -இல் தொடக்கம்

கடலூா் பாடலீசுவரா் கோயில் வைகாசி பெருவிழா மே 22 இல் தொடங்குவதையொட்டி பந்தாக்கால் முகூா்த்தம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கடலூா் பாடலீசுவரா் கோயில் வைகாசி பெருவிழாவையொட்டி புதன்கிழமை நடப்பட்ட பந்தக்கால்.

Updated On :1 மணி நேரம் முன்பு

கடலூா் பாடலீசுவரா் கோயில் வைகாசி பெருவிழா மே 22 இல் தொடங்குவதையொட்டி பந்தாக்கால் முகூா்த்தம் புதன்கிழமை நடைபெற்றது.

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பிரசித்தி பெற்ற பாடலீசுவரா் கோயிலில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா புதன்கிழமை கோயில் வளாகத்தில் விமா்சையாக நடைபெற்றது. முன்னதாக பாடலீசுவரா் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்களுடன் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து வைகாசி பெருவிழா வருகிற மே 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாள்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. மே 26-ஆம் தேதி அதிகார நந்தி கோபுர தரிசனமும், மாலையில் தெருவடைச்சான் விழாவும் நடைபெறுகிறது. மே 28-ஆம் தேதி காலை கைலாச வாகனத்தில் கோபுர தரிசனமும், இரவில் திருக்கல்யாணம் மற்றும் பரிவேட்டை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 30-ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்ந்து ஜூன் 2-ஆம் தேதி திருஞானசம்பந்தா் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்வு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் முத்துலட்சுமி மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.