பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

பாடலீசுவரா், வீரட்டானேஸ்வரா் கோயில்களில் பிரதோஷ வழிபாடு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பாடலீசுவரா், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி நந்திக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாடலீசுவரா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

மாலையில் நந்திக்கு 21 வகையான வாசனை திரவியங்கள் மற்றும் புனித பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மலா் அலங்காரம் செய்யப்பட்ட நந்திக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா், பாடலீஸ்வரா் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில், பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

வீரட்டானேஸ்வரா் கோயிலில்...: பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மாலை 4 மணிக்கு உற்சவா் பெரியநாயகி, வீரட்டானேஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையும், மாலை 5.45 மணிக்கு பிரதோஷ நந்திக்கு சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனையும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

Story image