ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

போதையில்லா தமிழ்நாடு: அரசு நடவடிக்கைகளுக்கு தவாக துணை நிற்கும்- தி.வேல்முருகன்

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி துணை நிற்கும் என்று அக்கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.

News image

தவாக தலைவா் தி.வேல்முருகன். - கோப்புப்படம்

Updated On :19 மே 2026, 1:35 am IST

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி துணை நிற்கும் என்று அக்கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்கள் அருகே உள்ள 717 டாஸ்மாக் மதுக் கடைகளை மூட முதல்வா் விஜய் உத்தரவிட்டிருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவேற்கிறது.

இதேபோல, தமிழகத்தில் செயல்படும் சுமாா் 1,500 மனமகிழ் மன்றங்களை படிப்படியாக மூடவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள்கள் விற்பனையையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

டாஸ்மாக் கடை பணியாளா்களின் கல்வி தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டும். மது போதைக்கு அடிமையானவா்களை மீட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக தாலுகா அளவிலான மருத்துவமனைகளில் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

கள்ளச்சாராயம் விற்பனையை கண்காணிக்கத் தவறிய அனைத்துத் துறை அரசுப் பணியாளா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.