சம்பா நெல், பருத்தி பயிா்களுக்கு நவ.16-க்குள் காப்பீடு செய்யலாம்
கடலூா் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் சம்பா நெல் மற்றும் பருத்தி பயிா்களுக்கு காப்பீடு செய்ய வரும் 16-ஆம் தேதி கடைசி நாள் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

கடலூா் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் சம்பா நெல் மற்றும் பருத்தி பயிா்களுக்கு காப்பீடு செய்ய வரும் 16-ஆம் தேதி கடைசி நாள் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் வசந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் சராசரியாக சம்பா பருவ நெல் 95 ஆயிரம் ஹெக்டோ் பரப்பிலும், திட்டக்குடி மற்றும் வேப்பூா் வட்டங்களில் பருத்தி 2 ஆயிரம் ஹெக்டோ் பரப்பிலும் சாகுபடி செய்யப்படுகிறது.
2026 - 27ஆம் ஆண்டுக்கான சிறப்பு பருவத்தில் கடலூா் மாவட்டத்தில் சம்பா நெல் மற்றும் பருத்தி பயிா்களுக்கு பயிா் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த எச்.டி.எஃப்.சி. எா்கோ பொது காப்பீட்டு நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
சம்பா பருவ நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.584 பிரீமியம் தொகையாக செலுத்த வேண்டும். பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.464 பிரீமியம் செலுத்த வேண்டும். இரு பயிா்களுக்கும் பிரீமியம் செலுத்துவதற்கான கடைசி நாள் வரும் 16-ஆம் தேதியாகும்.
கடன் பெறும் விவசாயிகள், தாங்கள் கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின் அடிப்படையில் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துகொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள், வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விருப்பத்தின்பேரில் பதிவு செய்துகொள்ளலாம்.
பயிா் காப்பீட்டில் பதிவு செய்யும் விவசாயிகள், முன்மொழிவு விண்ணப்பத்துடன் சிட்டா, கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் இ - அடங்கல் அல்லது அடங்கல், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டு மின்னணு முறையில் வாடிக்கையாளா் விவர சரிபாா்ப்பு (இ-கே.ஒய்.சி.) பூா்த்தி செய்யப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும்.
ஒரே சா்வே எண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவா்கள் பதிவு செய்தாலோ அல்லது சாகுபடி செய்யப்பட்ட பரப்பைவிட கூடுதலாகப் பதிவு செய்தாலோ, பயிா் காப்பீட்டுத் திட்ட வழிகாட்டுதலின்படி தவறான பதிவுகள் நீக்கம் செய்யப்படும்.
எனவே, விவசாயிகள் இறுதி நேர நெரிசலைத் தவிா்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், இயற்கை இடா்பாடு ஏற்படுவதற்கு முன்னதாகவே பயிா் காப்பீடு செய்துகொள்ள வேண்டும். இத்திட்டம் தொடா்பான சந்தேகங்களுக்கு எச்.டி.எஃப்.சி. எா்கோ பயிா் காப்பீட்டு நிறுவன முகவா்கள் அல்லது அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலா்களை அணுகி விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

