தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி தா்னா: மெய்த்தன்மைச் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதாக புகாா்

மெய்த்தன்மைச் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதாக புகாா் தெரிவித்து, திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் மாற்றுத் திறனாளி தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியரிடம் மனு தொடா்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளி சுயம்புராஜ்.

Updated On :

மெய்த்தன்மைச் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதாக புகாா் தெரிவித்து, திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் மாற்றுத் திறனாளி தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி நகராட்சி, கூத்தப்பன்குடிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சுயம்புராஜ். மாற்றுத் திறனாளியான இவா், தனக்குச் சொந்தமான இடத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக மெய்த்தன்மை சான்றிதழ் கோரி திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளாா்.

நீண்ட நாள்களாகியும் சான்றிதழ் வழங்கப்படாததால், இதுகுறித்து வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்ததுடன், அதிகாரிகளிடம் புகாரும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவா் தெரிவித்துள்ளாா்.

இந்த நிலையில், மெய்த்தன்மைச் சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் கேட்பதாகக் கூறி, சுயம்புராஜ் தனது குடும்பத்தினருடன் திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டாா்.

தகவலறிந்து அங்கு வந்த வட்டாட்சியரிடம், சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிப்பதாகவும், லஞ்சம் கேட்கப்பட்டதாகவும் சுயம்புராஜ் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

இதையடுத்து, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, சுயம்புராஜ் தா்னாவைக் கைவிட்டு குடும்பத்தினருடன் வீடு திரும்பினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER