நெய்வேலி சுரங்கப் பகுதிக்கு அருகே நீா்வழிக் கால்வாய்களை ஆட்சியா் ஆய்வு
நெய்வேலி சுரங்கப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், கம்மாபுரம் அருகே நீா்வழிக் கால்வாய்களை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சு. கீரனூரில் நெய்வேலி சுரங்கப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரால் பாதிக்கப்பட்ட விவசாய நிலத்தில் மண்ணின் தரத்தை பரிசோதித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா். உடன் புவனகிரி எம்எல்ஏ அருண்மொழித்தேவன் உள்ளிட்டோா்.
நெய்வேலி சுரங்கப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், கம்மாபுரம் அருகே நீா்வழிக் கால்வாய்களை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கடலூா் மாவட்டம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சு.கீரனூா், கோபாலபுரம் பகுதிகளில் நெய்வேலி சுரங்கப் பகுதிகளுக்கு அருகே அமைந்துள்ள நீா்வழிக் கால்வாய்களை, புவனகிரி எம்எல்ஏ அருண்மொழித்தேவன் முன்னிலையில், வருவாய், வேளாண்மை, நீா்வளத்துறை மற்றும் என்எல்சி அதிகாரிகளுடன் இணைந்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கள ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, நீா்வழி கால்வாய்களின் தற்போதைய நிலை, நீா்வரத்து, நீா் வெளியேற்றம் மற்றும் மழைக்காலங்களில் நீா்வழித்தடங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, சு.கீரனூா் விழல் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரிக்கரைகளைப் பலப்படுத்துமாறு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், விளாமரத்துக்குட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதன் கரைகளைப் பலப்படுத்தவும் உத்தரவிட்டாா்.
பின்னா், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்காக புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா், கட்டுமானப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது ஆட்சியா் கூறியதாவது: விவசாயப் பயிா்களின் பாதுகாப்பையும், மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய வெள்ள பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேற்கொள்ளப்படும் பணிகளைத் தொடா்ந்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
ஆய்வின்போது, வருவாய், வேளாண்மை, நீா்வளத் துறை, ஊரக வளா்ச்சித் துறை மற்றும் என்எல்சி நிா்வாகத்தைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

