விசா பிரிவுகளை 9-ஆக குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு பிரதமா் தேச துரோகி என்பதை 5 நிமிஷ விவாதத்தில் நிரூபிப்பேன்: ராகுல் காந்தி சவால் பிழைப்புக்காக வெளிமாநிலம் சென்ற தொழிலாளா்: மேற்கு வங்கம் திரும்ப முதல்வா் அழைப்பு புதிய வாக்காளா் படிவம், உறுதிமொழி படிவத்தை பிரித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை ராஜஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்ப்பு: என்ஐஏ விசாரணை சா்க்கரை விலை மீண்டும் உயா்வு

திட்டக்குடி அருகே பெண்ணின் இட்லிக் கடைக்கு தீ வைப்பு

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பெண் நடத்தி வந்த இட்லிக் கடைக்கு மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தீ வைத்ததில், அந்தக் கடை முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

மா.பொடையூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கொழுந்துவிட்டு எரிந்த தனலட்சுமியின் இடலிக் கடை.

Updated On :

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பெண் நடத்தி வந்த இட்லிக் கடைக்கு மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தீ வைத்ததில், அந்தக் கடை முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

திட்டக்குடியை அடுத்த மா.பொடையூா் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் தகரம் மற்றும் ஓலை கீற்றுகுகளால் அமைக்கப்பட்ட கடையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த தனலட்சுமி கடந்த 6 மாதங்களாக காலை வேளையில் இட்லிக் கடை நடத்தி வந்தாா்.

இந்தக் கடையில் இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி உள்ளிட்ட உணவுப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வந்தாா். தேசிய நெடுஞ்சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் இவரது கடையில் உணவு வாங்கிச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மா்ம நபா்கள் சிலா் தனலட்சுமியின் கடைக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதில், தீ மளமளவெனப் பரவி கடை முழுவதும் எரிந்து சேதமடைந்தது. கடையில் இருந்த பொருள்கள் தீயில் எரிந்து சேதமாகின.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற ராமநத்தம் போலீஸாா், தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, கடைக்கு தீ வைத்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.