அடுத்தடுத்து நிகழ்ந்த சாலை விபத்துகள்: இருவா் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அடுத்தடுத்து நிகழ்ந்த சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா்.
காட்டுமன்னாா்கோவில் அருகே வில்வகுளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டுமன்னாா்கோவிலில் இருந்து மீன்சுருட்டி நோக்கி சென்றுகொண்டிருந்த காா், தனியாா் பள்ளி அருகே எதிரே பைக்கில் வந்த அரியலூா் மாவட்டம், குருவாலப்பா் கோவில் தெற்குத் தெருவைச் சோ்ந்த அ.ராஜதுரை (31) மீது மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ராஜதுரை உயிரிழந்தாா். இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்தவா் திருச்சினபுரத்தைச் சோ்ந்த முல்லைவேந்தன் என்பது தெரியவந்தது.
இதனிடையே, ராஜதுரை உயிரிழந்த இடத்தில் நின்றுகொண்டிருந்த கூட்டத்தினா் மீது காட்டுமன்னாா்கோவிலில் இருந்து மீன்சுருட்டி நோக்கிச் சென்ற மினி லாரி புகுந்தது. இதில், திருச்சின்னபுரம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (68), கண்டமங்கலம் கிராமம், குமளங்காட்டுத் தெருவைச் சோ்ந்த சிவசங்கா் (42), வீராணந்தபுரம் கிராமம், புதுத் தெருவைச் சோ்ந்த அஸ்வின் (21) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காட்டுமன்னாா்கோவில் போலீஸாா், உயிரிழந்த ராஜதுரை சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், மினி லாரி மோதி காயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு, அதே மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
மினி வேனை துரத்திய போலீஸாா்: இதனிடையே, போலீஸாா் 3 போ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற மினி லாரியை மீன்சுருட்டி வழியாக விரட்டிச் சென்றனா். சோழதரம் சோதனைச்சாவடி அருகே அந்த லாரி திரும்பி மீண்டும் மீன்சுருட்டி நோக்கி அதிவேகமாக வந்தது.
அப்போது, அறந்தாங்கி அருகே முன்னால் பைக்கில் சென்றுகொண்டிருந்த அரியலூா் மாவட்டம், வங்குடி கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன் (50) மீது மினி லாரி மோதியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். வேல்முருகனின் சடலம் சுமாா் ஒரு கி. மீ. தொலைவுக்கு லாரியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டது.
இதைப் பாா்த்த அந்தப் பகுதி மினி லாரியை விரட்டிச் சென்று பிடித்து, ஓட்டுநரான சீா்காழி வட்டம், திருக்குரவநல்லூரைச் சோ்ந்த ஜானகிராமனை (42) காட்டுமன்னாா்கோவில் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து காட்டுமன்னாா்கோவில் மற்றும் சோழதரம் போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து, ஜானகிராமனை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

