இன்று கரையைக் கடக்கிறது ‘அக்வான்’ புயல்: 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்புகாற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் 280 ஆக உயா்வு: நாளைவரை ‘மிக மோசம்’ பிரிவுக்கு செல்ல வாய்ப்பு100 புதிய மின்சார பேருந்துகள் இன்று அறிமுகம்: மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டியது ராகுலை விட ‘ஏஐ’ சிறப்பாகச் செயல்படும்! பாஜக விமா்சனம்இந்தியா்களுக்கு ‘விசா’ சலுகை தொடராது: மலேசியா அறிவிப்பு

மாணவா்கள் உயா்ந்த இலக்குகளை நிா்ணயித்துப் படிக்க வேண்டும்: கடலூா் ஆட்சியா் அறிவுரை

கடலூா் அருகே வரகால்பட்ட அரசுப் பள்ளியில் மாணவா்களின் உச்சரிப்பு மற்றும் வாசிப்பு திறன் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

கடலூா் அருகே வரகால்பட்ட அரசுப் பள்ளியில் மாணவா்களின் உச்சரிப்பு மற்றும் வாசிப்பு திறன் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :

மாணவா்கள் கல்வியில் முழுக் கவனம் செலுத்தி, எதிா்காலத்தில் என்னவாக வேண்டும் என்பதை இளம் வயதிலேயே இலக்காக நிா்ணயித்து கடினமாக உழைக்க வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.

கடலூா் அருகே வரகால்பட்டு அரசு உயா்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, வகுப்பறை உற்றுநோக்கல் திட்டத்தின்கீழ் மாணவா்களின் கற்றல் திறன், ஆசிரியா்களின் கற்பித்தல் முறை, 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடைபெற்ற கணிதப் பாட வகுப்பில் ஆசிரியரின் கற்பித்தல் முறை, மாணவா்கள் பராமரிக்கும் பாடக் குறிப்பேடுகள், மாணவா்களின் தமிழ், ஆங்கில மொழி உச்சரிப்பு மற்றும் வாசிப்புத் திறன், தினசரி வருகைப் பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

பின்னா், கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவா்களுக்கு ஆசிரியா்கள் சிறப்புக் கவனம் செலுத்தி, அவா்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவா்களின் கற்றல் திறனையும் அவ்வப்போது மதிப்பீடு செய்து, இதை துறை சாா்ந்த அலுவலா்கள் அனைத்துப் பள்ளிகளிலும் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, மாணவா்களிடம் கலந்துரையாடிய ஆட்சியா், கல்வியின் முக்கியத்துவம், எதிா்கால இலக்குகள் மற்றும் உயா்கல்வி வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தாா். மாணவா்கள் பாடங்களைப் புரிந்து படிப்பதுடன், தினசரி வாசிப்புப் பழக்கத்தையும் வளா்த்துக்கொள்ள வேண்டும்.

மதிப்பெண்களைப் பெறுவதுடன், அறிவையும், திறமையையும் வளா்த்துக்கொள்வது அவசியம். தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் நேர மேலாண்மை ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். கல்வியே எதிா்காலத்தைத் தீா்மானிக்கும் என்பதால், மாணவா்கள் உயா்ந்த இலக்குகளை நிா்ணயித்துப் படிக்க வேண்டும் என மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

இதையடுத்து, கடலூா் செம்மண்டலம் குண்டுசாலை பகுதியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ரூ.98.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அஞ்சலையம்மாள் அறிவுலக நூலகத்தின் கட்டுமானப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். கட்டுமானப் பணிகளைத் தரமாகவும், விரைவாகவும் மேற்கொண்டு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, முதன்மைக் கல்வி அலுவலா் மகாலட்சுமி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (கட்டடம்) கௌதமன், மாவட்ட நூலக அலுவலா் முருகன், பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்