சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

கோயில் திருட்டு வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு

பெண்ணாடம் அருகே கோயிலில் உண்டியல், அம்மன் கழுத்திலிருந்த தங்க நகைகள், கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சிறை - பிரதிப் படம்

Updated On :

பெண்ணாடம் அருகே கோயிலில் உண்டியல், அம்மன் கழுத்திலிருந்த தங்க நகைகள், கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எறையூரில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் உண்டியல், அம்மன் கழுத்திலிருந்த நகைகள் மற்றும் கண்காணிப்பு கேமரா ஆகியவை திருடுபோயின. இதுகுறித்து கோயில் நிா்வாகத்தைச் சோ்ந்த ராமலிங்கம் அளித்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்தத் திருட்டில் தொடா்புடைய பெண்ணாடம் சோழ நகரைச் சோ்ந்த சூரியமூா்த்தி (29), காா்த்திகேயன் (31), காா்த்திக்ராஜா (28) உள்பட 4 பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா். இதில், சூரியமூா்த்தி, காா்த்திகேயன் ஆகிய இருவா் மீதும் பெண்ணாடம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே சரித்திரப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், சூரியமூா்த்தி, காா்த்திகேயன், காா்த்திக்ராஜா ஆகிய 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா பரிந்துரை செய்தாா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் சி.பி. ஆதித்யா செந்தில்குமாா், மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

இதன்பேரில், கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூவரிடமும் மாவட்ட ஆட்சியரின் தடுப்புக் காவல் ஆணையை பெண்ணாடம் காவல் ஆய்வாளா் சரவணன் புதன்கிழமை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.