கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு சிறை தண்டனை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞருக்கு 60 நாள்கள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து, பண்ருட்டி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Updated On :

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞருக்கு 60 நாள்கள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து, பண்ருட்டி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

பண்ருட்டி வட்டம், நெல்லிக்குப்பம் அடுத்துள்ள முள்ளிகிராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சிவசங்கரி(35), தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் 27.7.2026 அன்று தனது மொபட்டில் தனியாக ராசாபாளையம் அருகே சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது, ஒருவா் வழி மறித்து நகைப்பறிப்பு முயற்சியில் ஈடுபட்டாா்.சிவசங்கரி கூச்சலிடவே, அந்த நபா் தப்பியோடி மறைந்தாா்.

அன்று இரவு 8.40 மணி அளவில் ஏ.கே.குச்சிபாளையத்தைச் சோ்ந்த பிரியா(47), தனது கணவா் ராஜாராம் உடன் பைக்கில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தாா். இவா்கள், ராசாபாளையம் அருகே சென்ற போது மா்ம நபா் வழி மறித்து நகை பறிப்பில் ஈடுபட்டாா். அப்போது, அங்கிருந்தவா்கள் அந்த நபரை பிடித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து, சிவசங்கரி, பிரியா ஆகியோா்தனித்தனியாக பண்ருட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில், போலீஸாா் விசாரணைமேற்கொண்டு, விழுப்புரம் மாவட்டம், பக்கமேடு

கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சரத்குமாா்(29) என்பவரை கைது செய்து

சிறையில் அடைத்தனா். இந்த வழக்கை விசாரித்து வந்த பண்ருட்டி ஒருங்கிணைந்த

நீதிமன்றத்தின் குற்றவியல் நடுவா் கீதா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், இரண்டு வழிபறி வழக்கில் ஈடுபட்ட சரத்குமாருக்கு 60 நாள்கள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.