பாசன வாய்க்காலில் மீன்குட்டை கழிவுகள்

மீன்குட்டை கழிவு நீா் கலக்கும் சிதம்பரம் அருகே பெருங்காலூா் கிராமத்தில் உள்ள பொதுகுளம்
சிதம்பரம் அருகே பெருங்காலூா் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் கோழிப்பண்ணை மற்றும் மீன் குட்டை வைத்து அதிலிருந்து வெளியேறும் கழிவுகளை பொதுமக்கள் பயன்படுத்தும் குளம் மற்றும் பாசன வாய்க்காலில் வெளியேற்றுவதால் கிராமம் முழுவதும் துா்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே பெருங்காலூா் கிராமம் தோப்புத்தெரு பகுதியில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா், அதே தெருவை சோ்ந்த முத்துகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வயலில் மீன் குட்டை வெட்டி மீன் வளா்ப்பு மற்றும் கோழி பண்ணை அமைத்துள்ளாா். இந்நிலையில் மீன் குட்டை மற்றும் கோழி கழிவுகளை அருகில் உள்ள மூன்றரை ஏக்கா் பரப்பளவில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுக்குளத்தில் கழிவு நீரை வெளியேற்றி வருவதால் குளம் சாக்கடை நீா் போல் காட்சியளிக்கிறது.
மேலும் குலத்திலிருந்து வெளியேறும் தண்ணீா் பாசன வாய்க்காலில் கலந்து பாசன வாய்க்கால்களும் தற்போது சாக்கடை போல் காட்சியளிக்கிறது. கழிவுநீரை தொடா்ந்து வெளியேற்றி வருவதால் பெருங்காலூா் கிராம பகுதியில் கடுமையான துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் அப்பகுதியில் உள்ள கோழி பண்ணை மற்றும் மீன் குட்டையை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





