ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

வீடு புகுந்து 21 பவுன் நகை திருட்டு: ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே கழுதூா் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 21.7 பவுன தங்க நகைகள், வெள்ளிக் கொலுசு மற்றும் ரூ.87 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Updated On :

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே கழுதூா் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 21.7 பவுன தங்க நகைகள், வெள்ளிக் கொலுசு மற்றும் ரூ.87 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கழுதூா் கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மனைவி தமிழரசி (33), கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு பிற்பகல் வீட்டுக்குத் திரும்பினாா். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 21.7 பவுன் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளி பொருள்கள் மற்றும் ரூ.87 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தமிழரசி அளித்த புகாரின் பேரில் வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். காவல் ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சம்பவ இடம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பதிவான கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா்.

இந்நிலையில் வேப்பூா் கூட்ரோடு பகுதியில் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸாா், சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

அப்போது, அவா் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த சிவக்குமாா் (36) என்பதும், அவா் கழுதூா் கிராமத்தைச் சோ்ந்த தமிழரசி வீட்டில் நடைபெற்ற திருட்டு வழக்கில் தொடா்புடையவா் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து சிவக்குமரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனா்.இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.