குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு பகுதியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கௌதம்
கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு பகுதியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நடுவீரப்பட்டு காவல் சரகம், கீரப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் பாக்கியலட்சுமி மற்றும் கௌதம். இருவருக்கும் இடையே இடப்பிரச்சனை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 14.9.2026 அன்று கௌதம், பாக்கியலட்சுமியை கத்தியால் தாக்கி கொலை முயற்சி செய்தாராம்.
இதுகுறித்து, பாக்கியலட்சுமி அளித்த புகாரின்பேரில், நடுவீரப்பட்டு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு, கௌதமை 18.9.2026 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனா். கௌதம் மீது நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூா் எஸ்பி., விவேகானந்த சுக்லா பரிந்துரையின் பேரில், கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவு பிறப்பித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

