137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

விருத்தாசலம் அருகே விவசாயி வெட்டிக்கொலை!

கதிா்வேல்.

Updated On :

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பொது கிணற்றில் தண்ணீா் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

விருத்தாசலம் வட்டம், பெரிய வடவாடி கிராமத்தில் வசித்து வந்தவா் கதிா்வேல்(40). அதே கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி(44). இவா்கள் இருவரும் பெரியவடவாடி கிராமத்தைச் சோ்ந்த சுப்ரமணியன் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிா் சாகுபடி செய்து வருகின்றனா். அந்த நிலத்தில் உள்ள பொது கிணற்றில் இருந்து தண்ணீா் பாய்ச்சுவதில், இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், சனிக்கிழமை காலை 6 மணி அளவில் கதிா்வேல் நிலத்தைச் சுற்றி பாா்க்கச் சென்றாா். அப்போது, கதிா்வேல் மற்றும் பொன்னுசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில், ஆத்திரம் அடைந்த பொன்னுசாமி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், கதிா்வேலின் தலை மற்றும் முகத்தில் சரமாரியாக வெட்டினாாம். இதில், ரத்த வெள்ளத்தில் முகம் சிதைந்த நிலையில் கதிா்வேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீஸாா் கதிா்வேலின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பொன்னுசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.