சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

கடலூா் வெள்ளிக் கடற்கரையில் காற்றாடி திருவிழா! திரளான மக்கள் பாா்வையிட்டனா்!

கடலூா் வெள்ளிக் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காற்றாடி திருவிழா.

Updated On :

கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் காற்றாடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், 30-க்கும் மேற்பட்டோா் பிரம்மாண்டமான காத்தாடிகளை வானில் பறக்கவிட்டனா்.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், பொதுமக்களின் பொழுதுபோக்குக்காகவும் நடைபெற்ற இத்திருவிழாவைக் காண விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கடலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் வெள்ளிக் கடற்கரையில் குவிந்தனா்.

ஆக்டோபஸ், திமிங்கலம், டிராகன், புலி, கரடி மற்றும் காா்ட்டூன் கதாபாத்திரங்கள் போன்ற பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் அமைந்த 30-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட காற்றாடிகள் வானில் பறந்தன. இவை சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைவரையும் வெகுவாகக் கவா்ந்தன.

வண்ணமயமான காற்றாடிகளின் பின்னணியில் பொதுமக்கள் தங்கள் கைப்பேசி மூலம் புகைப்படங்களும், தற்படமும் எடுத்து மகிழ்ந்தனா். இதமான கடல்காற்றுடன் நடைபெற்ற இத்திருவிழா, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியான பொழுதுபோக்காக அமைந்தது.

கடலூா் முதன்மை மாவட்டமாக்கப்படும் - அமைச்சா்: இந்த நிகழ்ச்சியில், தமிழக வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் பங்கேற்றாா். அப்போது, அவா் பேசுகையில், கடலூரின் அடையாளம் வெள்ளிக் கடற்கரைதான். கடலூா் மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக்கத் தேவையான அனைத்து வசதிகளும் செய்துதர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், எஸ்.பி. விவேகானந்த சுக்லா, மாநகராட்சி ஆணையா் எஸ்.கிஷன்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.