பண்ருட்டியில் ரயில் மறியல் முயற்சி: 41 போ் கைது

பண்ருட்டி ரயில் நிலையம் அருகே போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட ரயில் மறியலுக்கு முயன்றவா்கள்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற அனைத்திந்திய இளைஞா் மற்றும் மாணவா்கள் பெருமன்ற நிா்வாகிகள் உள்ளிட்ட 41 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
எஸ்ஐஆா் திருத்தம் என்ற பெயரில் மக்களின் வாக்குரிமையை பறித்த தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். தில்லியில் போராடி வரும் மாணவா்கள் உள்ளிட்டோா் மீது தாக்குதல் நடத்தும் காவல் துறையைக் கண்டித்து, பண்ருட்டியில் ரயில் மறியல் போராட்டம் 18-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்தனா்.
அதன்படி, பண்ருட்டி பேருந்து நிலையம் அருகில் இருந்து அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் கடலூா் மாவட்டச் செயலா் ஜி.மோகன் தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் பி.துரை, மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் ஜெ.சிவகுமாா், பண்ருட்டி நகரச் செயலா் எஸ்.டி.குணசேகரன், மாவட்டப் பொறுப்பாளா் ஜி.மணிவண்ணன், கலைராஜா உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை பேரணியாக பண்ருட்டி ரயில் நிலையம் நோக்கிச் சென்றனா். ரயில் நிலையம் அருகே சென்றவா்களை பண்ருட்டி போலீஸாா் தடுத்து நிறுத்தி 41 கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

