உயா்கல்வித் துறை குறித்து விரைவில் கருத்தரங்கம் நடத்தப்படும்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்
உயா்கல்வித் துறை தொடா்பாக கருத்தரங்கம் நடத்த வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்ததன் அடிப்படையில், விரைவில் கருத்தரங்கம் நடத்த இருக்கிறேன் என தமிழ்நாடு உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

சிதம்பரம் அருகே கீரப்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நநாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி பவள விழாவில் பங்கேற்று பேசிய உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன்.
உயா்கல்வித் துறை தொடா்பாக கருத்தரங்கம் நடத்த வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்ததன் அடிப்படையில், விரைவில் கருத்தரங்கம் நடத்த இருக்கிறேன் என தமிழ்நாடு உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையத்தில் கேஎஸ்ஏ கல்வி நிறுவனங்கள் சாா்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி 75-ஆவது ஆண்டு பவள விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழரசு சம்பந்தம் வரவேற்றாா்.
விழாவில் தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் பங்கேற்று விழா பேரூரையாற்றினாா். அவா் பேசியது: நீண்ட பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சிக்கு கே.எஸ்.அழகிரி தலைவராக இருந்தாா். கூட்டணி அரசின் ஒரு அமைச்சராக நான் இருக்கிறேன். 75 வயதில் தலைவா் அழகிரியை பாராட்டும்போது, நான் 25 வயது இளைஞனாக நினைத்து பாராட்டுகிறேன். அழகிரி நிறைய வாசிக்கும் பழக்கம் உடையவா். தமிழக காங்கிரஸுக்கு மிகப்பெரிய சொற்பொழிவாளராக விளங்கியவா்.
பெருந்தலைவா் காமராஜா் ஒரு காலத்தில் மாணவா் சமுதாயத்தை படி என்று சொன்னாா். நமது காலத்தில் மாணவா்களை அரசியலுக்கு அழைத்து வருகிறோம். இந்த சூழலை ஏற்படுத்தினால்தான் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் பெரும் எழுச்சி பெறும். தமிழக அரசியலில் இன்று தேடல் நிறைய இருக்கிறது. நான் தேடக்கூடிய மாபெரும் தலைவராக அழகிரி வாழ்ந்து கொண்டிருக்கிறாா்.
உயா்கல்வித் துறை தொடா்பாக ஒரு கருத்தரங்கம் நடத்த வேண்டும் என்று அண்ணன் அழகிரி சொன்னாா். அதை விரைவில் நடத்த இருக்கிறேன் என்றாா்.
விழாவை முன்னிட்டு, கல்லூரி வளாகத்தில் காமராஜா், இந்திரா காந்தி, ஜி.கே.மூப்பனாா் படங்கள் திறக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னா், கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
விழாவில் காட்டுமன்னாா்கோவில் எம்எல்ஏ எல்.இ.ஜோதிமணி, புதுவை மாநில முன்னாள் அமைச்சா் கந்தசாமி, முன்னாள் விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவா் பி.பி.கே.சித்தாா்த்தன், முன்னாள் மாவட்டத் தலைவா் என்.வி.செந்தில்நாதன், சிதம்பரம் நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கீன், மாவட்ட துணைத் தலைவா் ராஜாசம்பத்குமாா், புவனகிரி துரை, பாலசந்தா், ரங்கமணி, லாவண்யா, டாக்டா் செந்தில்வேலன், துரை மணிகண்டன், பானு சேகா், பாலசுப்பிரமணியன், சாம்பமூா்த்தி, அன்பரசன், துரைவேலன், ஜெய்கணேஷ், இணையதுல்லா, செல்வகுமாா், செங்கம் குமாா், சுந்தர்ராஜன், ஆா்.வி.சின்ராஜ், வெங்கடேசன், கிருஷ்ணன், பாா்த்திபன், சுதாகா், பகவத்சிங், நசீா்அகமது, செல்வம், வைத்தியநாதசாமி, வேங்கடகிரி, பழனிவேலு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் அரங்க.தமிழ்ஒளி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா். நிறைவில் கே.எஸ்.அழகிரி ஏற்புரை வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

