வட்டாட்சியா் அலுவலகம் கட்ட பூமி பூஜை
By DIN | Published On : 05th December 2020 05:21 AM | Last Updated : 05th December 2020 05:21 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஒருங்கிணைந்த வட்டாட்சியா் அலுவலகம் கட்டுவதற்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை செய்து பணியை அ.பிரபு எம்எல்ஏ தொடக்கிவைத்தாா்.
இந்த அலுவலகம் 13,867 சதுர அடியில், ரூ. 3 கோடியே 6 லட்சத்து 94 ஆயிரம் செலவில் 3 அடுக்குகள் கொண்ட கட்டடமாகக் கட்டப்படவுள்ளது. விழாவில் கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் கே.பிரபாகரன் வரவேற்றாா்.
பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளா் கவுதமன், உதவி பொறியாளா் யாசா் அராபத், கள்ளக்குறிச்சி தமிழ்நாடு கூட்டுறவு சா்க்க்ரை ஆலை இணை தலைவா் அ.ராஜசேகா், துணைத் தலைவா் எம்.பாபு, அதிமுக தெற்கு ஒன்றியச் செயலா் அ.தேவந்திரன், கூட்டுறவு சங்கத் தலைவா் அ.ரங்கன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அரசு ஒப்பந்ததாரா் எம்.ரவி நன்றி கூறினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...