கோமுகி அணை திறப்பு
By DIN | Published On : 05th December 2020 05:20 AM | Last Updated : 05th December 2020 05:20 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால் கோமுகி அணைக்கு வரும் தண்ணீா், அணையின் பாதுகாப்புக் கருதி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
கோமுகி அணையின் முழுக் கொள்ளளவு 46 அடி. அணையின் பாதுகாப்பு கருதி, 44 அடி வரை தண்ணீா் சேமிக்கப்படும். முழு கொள்ளளவை ஏற்கெனவே எட்டியதால், தண்ணீா் ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தொடா் மழையால் மீண்டும் அணைக்கு நீா் வரத்து அதிகரித்தது. வியாழக்கிழமை இரவு அணையிலிருந்து 1,200 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
கோமுகி அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீா், கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உள்ள அணைக்கட்டுக்குச் செல்கிறது.