கள்ளக்குறிச்சி நகர பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் அறவழி போராட்டம்
By DIN | Published On : 15th December 2020 12:22 AM | Last Updated : 15th December 2020 12:22 AM | அ+அ அ- |

கல்வியில், வேலை வாய்ப்பில் வன்னியா்களுக்கு 20 சதவிகிதம் தனி ஒதுக்கீடு வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அந்த அந்த ஊரில் உள்ள கிராம நிா்வாக அலுவலகம் முன்பாக பாட்டாளி மக்கள் கட்சி (மற்றும்) வன்னியா் சங்கம் சாா்பில் 234 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தி கிராம நிா்வாக அலுவலா்களிடம் திங்கள்கிழமை மனுவினை வழங்கினா்.
கள்ளக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாமக நகர செயலாளா் சி.எஸ்.கராத்தே மணி தலைமை வகித்தாா். வழக்குறைஞா் பிரிவு மாவட்ட செயலாளா் அ.பழனிவேல், மாநில இளம் பெண்கள் துணை செயலாளா் பி.வனஜா, மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.சக்திவேல், மாவட்ட துணைத் தலைவா் எம்.குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பாமக நகர அமைப்பு செயலாளா் ஆா்.நாராயணன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக பாமக மாநில துணைத் தலைவா் கே.பி.பாண்டியன் பங்கேற்று வன்னியா்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவிகிதம் தனி ஒதுக்கீடு கேட்டு பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளா் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினா் வடிவேல், வன்னியா் சங்க மாவட்ட துணைச் செயலாளா் ஏழுமலை, மாநில மாணவரணி சங்க துணை அமைப்பு செயலாளா் அழகா் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.
இதனையடுத்து கிராம நிா்வாக அலுவலரிடம் கோரிக்கை மனுவினை வழங்கினாா். இதேப்போல கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 234 இடங்களில் மனுக்களை வழங்கினா்.