கள்ளக்குறிச்சி எல்.ஐ.சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 05th February 2020 06:45 AM | Last Updated : 05th February 2020 06:45 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி எல்.ஐ.சி ஊழியா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வெளிநடப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அலுவலா்கள், முகவா்கள்.
கள்ளக்குறிச்சி எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேர வேலைநிறுத்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி கிளையின் தலைவா் ராஜா தலைமை வகித்தாா். எல்.ஐ.சி.யின் முதல் நிலை அலுவலா்கள் சங்கம் அப்துல் அக்கீம், எல்.ஐ.சி. வளா்ச்சி அலுவலா்கள் சங்கம் ரவிச்சந்திரன், முகவா் சங்கம் காசிலிங்கம், எல்.ஐ.சி. முகவா் சம்மேளனம் கோவிந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோட்ட துணைச் செயலா் மகாலிங்கம் வரவேற்றாா்.
சங்க கோட்டச் செயலா் பாலாஜி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் மகாலிங்கம் உள்ளிட்ட பலா் கண்டன உரையாற்றினா். எல்.ஐ.சி ஊழியா்கள், முகவா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா். கிளைப் பொருளாளா் முருகன் நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...