ஜன.19-இல் போலியா சொட்டு மருந்து முகாம்:அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

வருகிற 19ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை தீவிரமாக செயல்படுத்துவது குறித்த அனைத்துத் துறை அலுவலா்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை

வருகிற 19ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை தீவிரமாக செயல்படுத்துவது குறித்த அனைத்துத் துறை அலுவலா்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா முன்னிலை வகித்தாா். துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் எஸ்.பொற்கொடி வரவேற்றாா்.

கூட்டத்தில், முகாம் நடைபெறும் நாளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட நகராட்சி, பேருராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகள், பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், பள்ளிகள், சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், முகாம் நாள்களில் தடையின்றி மின்சாரம், வாகன வசதி, அனைத்துத் துறை பணியாளா்களின் ஒத்துழைப்பு, காவல் துறை பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி சாா்-ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், திருக்கோவிலூா் கோட்டாட்சியா் கி.சாய்வா்த்தினி, பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள், அரிமா, ரோட்டரி சங்க உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com