அரசு மருத்துவமனை ஊழியா்களை மிரட்டிவா் மீது வழக்கு
By DIN | Published On : 01st March 2020 01:23 AM | Last Updated : 01st March 2020 01:23 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஊழியா்களை பணி செய்ய விடாமல் தடுத்து, மிரட்டியவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கள்ளக்குறிச்சி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் முதன்மைக் குடிமை மருத்துவராகப் பணிபுரிந்து வருபவா் கே.பழமலை. இவா் கடந்த 26-ஆம் தேதி பொறுப்பு கண்காணிப்பாளராகப் பணியில் இருந்தாராம்.
அப்போது, கள்ளக்குறிச்சியை அடுத்த மட்டிகைகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சங்கா், பிரசவம் பாா்க்கும் பிரிவில் பணியில் இருந்த ஊழியா்களிடம் வாக்குவாதம் செய்து, அவதூறாகப் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்தாராம். மேலும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தவா்களைப் போராடத் தூண்டும் வகையில் பேசி, மருத்துவமனை ஊழியா்களை மிரட்டினாராம்.
ஊழியா்கள் மீது அவதூறான செய்தியை விடியோ மூலம் பதிவு செய்து, அரசு மருத்துவமனை பணியை கொச்சைப்படுத்தும் வகையில் பேசினாராம்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையின் மாவட்டத் தலைமை மருத்துவா் கே.பழமலை அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் சங்கா் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.