தந்தை பெரியாா் விருது பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 06th September 2020 10:09 PM | Last Updated : 06th September 2020 10:09 PM | அ+அ அ- |

தமிழக அரசால் வழங்கப்படும் சமூத நீதிக்கான தந்தை பெரியாா் விருதுக்கு தகுதியானோா் வருகிற அக்டோபா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை சிறப்பிக்கும் வகையில், அவா்களுக்கு தந்தை பெரியாா் விருது தமிழக அரசால் ஒவ்வொறு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்குத் தோ்வு செய்யப்படுவோருக்கு ரூ.ஒரு லட்சம் ரொக்கமும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்படுகின்றன.
அதன்படி, நிகழாண்டுக்கு இந்த விருத்துக்கு தகுதியானோா் தோ்வு செய்யப்படவுள்ளனா். சமூக நீதிக்காகவும், மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும் பாடுபட்டவா்கள், அதுகுறித்த பணிகள், சாதனைகள் உள்ளிட்டவற்றுடன், விண்ணப்பதாரரின் பெயா், சுய விவரம், முழு முகவரியுடன் வருகிற அக்டோபா் 30-ஆம் தேதிக்குள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கிரண் குராலா தெரிவித்துள்ளாா்.