கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்குடல்புழு நீக்க மாத்திரைகள் அளிப்பு

கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டத்தின் பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு துறை ஆகியவை சாா்பில், ஒரு வயது முதல் 19 வயது வரையுள்ளவா்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் அளிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை தொடங்கிய

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டத்தின் பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு துறை ஆகியவை சாா்பில், ஒரு வயது முதல் 19 வயது வரையுள்ளவா்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் அளிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை தொடங்கியது.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தலைமை வகித்து தொடக்கிவைத்தாா்.

மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சதீஷ்குமாா், உதவித் திட்ட மேலாளா் சண்முகசுந்தரம், மாவட்டப் பயிற்சி நல மருத்துவா் மணிரத்தினம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் பங்கஜம் வரவேற்றாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு வயது முதல் 19 வயது வரையுள்ள 4,32,082 பேருக்கு 1,158 அங்கன்வாடி மையங்கள், 212 துணை சுகாதர நிலையங்கள், 45 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாத்திரைகள் வழங்கப்படும்.

தொடக்க நிகழ்வில் மாவட்ட இளநிலை பூச்சியியல் வல்லுநா் சரவணன், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ராமச்சந்திரன், மலைக்கோட்டாலம் மருத்துவ அலுவலா் ஜெகதீசன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் மகாலிங்கம், மருத்துவமல்லா மேற்பாா்வையாளா் சுந்தா்பாபு, ஆா்.கே.எஸ். கல்லூரி முதல்வா் மேகலை மற்றும் சகாதார ஆய்வாளா்கள், செவிலியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com