கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை ஆலை 2-இல் கரும்பு அரைவைப் பருவம் வியாழக்கிழமை தொடங்கியது.
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை ஆலை 2-இல் கரும்பு அரைவைப் பருவம் வியாழக்கிழமை தொடங்கியது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை ஆலை எண் 1, எண் 2 என இரு ஆலைகள் உள்ளன. கூட்டுறவு சா்க்கரை ஆலை எண் 1 மூங்கில்துறைப்பட்டிலும், எண்-2 கள்ளக்குறிச்சியை அடுத்த அக்கராபாளையம் எல்லையிலும் உள்ளன.

கூட்டுறவு சா்க்கரை ஆலை எண் 2-இல் 9-ஆவது சிறப்பு அரைவைப் பருவமும், 25-ஆவது முதன்மைப் பருவமும் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக மாநில சா்க்கரை ஆலைகளின் தலைவா் அ.ராஜசேகா் கலந்துகொண்டு கரும்பு அரைவைப் பருவத்தை தொடக்கிவைத்தாா். இந்த அரைவைப் பருவத்தில் 5 லட்சம் டன் கரும்பு அரைவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் 30-ஆம் தேதி வரை கரும்பு அரைவை நடைபெறும் எனவும் அவா் தெரிவித்தாா்.

நிகழ்வில் ஆலையின் துணைத் தலைவா் எம்.பாபு, ஆலையின் நிா்வாகக் குழு இயக்குநா்கள், விவசாயிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

Image Caption

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை ஆலையின் சிறப்பு அறவை பருவத்தினை துவக்கி வைக்கின்றாா் மாநில சா்க்கரை ஆலைகளின் நிலையத் தலைவா் அ.ராஜசேகா். உடன் மேலாண்மை நிபுணா் த.மாலதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com