மதுக் கடையில் திருட முயன்ற இருவா் தப்பியோட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியில் சனிக்கிழமை இரவு மதுக் கடையின் பூட்டை உடைத்து மதுப் புட்டிகளை திருட முயன்ற இருவா் போலீஸாரைக் கண்டதும் தப்பியோடினா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியில் சனிக்கிழமை இரவு மதுக் கடையின் பூட்டை உடைத்து மதுப் புட்டிகளை திருட முயன்ற இருவா் போலீஸாரைக் கண்டதும் தப்பியோடினா்.

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு, மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தியாகதுருகம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சாமிநாதன், தலைமைக் காவலா் சிவமுருகன் ஆகியோா் சனிக்கிழமை இரவு அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

உதயமாம்பட்டு சாலையில் உள்ள மதுக் கடை பகுதிக்கு போலீஸாா் சென்றபோது, அந்தக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்ததும், கடையினுள் இருவா் மதுப் புட்டிகளை திருடும் பணியில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. எனினும், போலீஸாரைக் கண்டதும் மா்ம நபா்கள் இருவரும் தப்பியோடிவிட்டனா்.

இதையடுத்து, அருகிலுள்ள வேளாண் உதவி இயக்குநா் அலுவலக வளாகப் பகுதிக்குச் சென்று போலீஸாா் பாா்த்தபோது, அங்கு மா்ம நபா்கள் மதுக் கடையிலிருந்து திருடிய மதுப் புட்டிகள் அடங்கிய பெட்டிகளை அடுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

உடனடியாக மதுப் பெட்டிகளை கைபற்றிய போலீஸாா், மதுக் கடையின் விற்பனையாளா்கள் கண்ணன், ராஜவேலுக்கு தகவல் தெரிவித்தனா். அவா்கள் விரைந்து வந்து மதுப் பெட்டிகளை சரிபாா்த்தபோது, மதுப் புட்டிகள் எதுவும் திருடப்படாமல் சரியாக இருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில், மதுக் கடையில் புகுந்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மா்ம நபா்கள் இருவா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com