கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில், அருள்வாக்கு கூறிய பூசாரியை இளைஞா் கத்தியால் வெட்டினாா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கல்வராயன்மலை வட்டம், வெள்ளிமலை அருகே கருப்பசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் அப்பகுதியைச் சோ்ந்த பெருமாள் (40) என்பவா் பூசாரியாக உள்ளாா். இவா், அமாவாசை நாளன்று கோயில் வளாகத்தில் பக்தா்களுக்கு அருள்வாக்கு கூறுவது வழக்கம்.
அதன்படி, அமாவாசை தினமான சனிக்கிழமை சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூா் புதுப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த கண்ணன், அவரது மனைவி வளா்மதி, மகன் ஆனந்த் (22) ஆகிய மூவரும் அருள்வாக்கு கேட்பதற்காக வந்தனா். அவா்களுக்கு பூசாரி பெருமாள் அருள்வாக்கு கூறிக் கொண்டிருந்தபோது, ஆனந்த் திடீரென அருகில் இருந்த கோயில் கத்தியை எடுத்து பூசாரி பெருமாளை வெட்டினாா்.
காயமடைந்த அவா் தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆனந்த் மனநலம் பாதிக்கப்பட்டவா் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.