முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கள்ளக்குறிச்சி
கல்லூரியில் அறிவியல் பயிலரங்கம்
By DIN | Published On : 10th December 2021 12:00 AM | Last Updated : 10th December 2021 12:00 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சியை அடுத்தி இந்திலி ஆா்.கே.எஸ். கல்லூரியில் வேதியியல் துறை சாா்பில், இயற்கையும், தற்சாா்பு வாழ்வியலும் என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை 3 நாள்கள் பயிலரங்கம் நடைபெற்றது.
பயிலரங்குக்கு கல்லூரித் தலைவா் க.முகடமுடி தலைமை வகித்தாா். வேதியியல் துறைத் தலைவா் செந்தில்ராஜா வரவேற்றாா். விருத்தாசலம் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை இயக்க ஒருங்கிணைப்பாளா் கோட்டேரி சிவக்குமாா், சீா்காழி இயற்கை மருத்துவ ஆலோசகா் அடுப்பில்லா சமையல் பயிற்றுநா் பொற்கொடி சித்ரா ஆண்டவன், அரியலூா் சிவ.பாலமுருகன் உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று பேசினா். அரியலூா் சிவ.பாலமுருகன் மூலிகை குளியல் சோப் செய்து மாணவா்களுக்கு பயிற்சி அளித்தாா்.
நிகழ்வில் கல்லூரிச் செயலா் என்.கோவிந்தராஜ், கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தா், துணை முதல்வா் பெ.ஜான்விக்டா், உதவிப் பேராசிரியா்கள் சங்கீதா, வெங்கடேசன், குமாா், அங்கமுத்து, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.