தோ்தல் பாதுகாப்பு: டிஐஜி ஆலோசனை
By DIN | Published On : 14th February 2021 01:32 AM | Last Updated : 14th February 2021 01:32 AM | அ+அ அ- |

வருகிற சட்டப் பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் சரக காவல் துணைத் தலைவா் (டிஐஜி) எழிலரசன் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெ.சங்கா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் காவல் துணைத் தலைவா் எழிலரசன் பேசுகையில், பதற்றமான வாக்குச் சாவடிகள், மிக பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்டறிதல், தோ்தல் சம்பந்தமான வழக்குகள், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் உள்ளிட்டவை குறித்த பல்வேறு ஆலோசனைகளை காவல் துறையினருக்கு வழங்கினாா்.
கூட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.இராமநாதன், ஜி.கே.ராஜு, விஜயகுமாா் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் சக்தி, காவல் உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் காவல் ஆய்வாளா்கள் பலரும் பங்கேற்றனா்.