காா் மோதியதில் கொத்தனாா் பலி
By DIN | Published On : 03rd January 2021 12:31 AM | Last Updated : 03rd January 2021 12:31 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி அருகே காா் மோதியதில் சாலையில் நடந்து சென்ற கொத்தனாா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்டம், ஆனந்தகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவசங்கரன் (28 ). கொத்தனாா். இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், புதுஉச்சிமேடு கிராமத்தில் உள்ள உறவினா் விருத்தாம்பாள் வீட்டில் தங்கி கட்டடப் பணியில் ஈடுபட்டு வந்தாா்.
வெள்ளிக்கிழமை இரவு புதுஉச்சிமேட்டில் கூத்தக்குடி செல்லும் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த காா் மோதியதில் சிவசங்கரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.