

உலக தொழுநோய் எதிா்ப்பு தினத்தையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம் சாா்பில், கள்ளக்குறிச்சியில் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டுத் திட்டம் தேசிய தொழுநோய் சேவை அறக்கட்டளை சாா்பில் நடத்தப்பட்ட இந்தப் பேரணி, கள்ளக்குறிச்சி மாடூா் சுங்கச்சாவடியில் தொடங்கியது.
பேரணியை வடதொரசலூா் டி.எல்.எம்.தொழுநோய் மருத்துவமனை அலுவலா் கபிலன் தொடக்கிவைத்தாா். மாற்றுத் திறனாளிகள் மூன்று சக்கர மோட்டாா் சைக்கிள்களில் தொழுநோய் குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியவாறு ஆட்சியா் அலுவலகம் வந்தடைந்தனா்.
பின்னா், வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் தொழுநோய் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
பேரணியில் மாற்றுத் திறனாளிகள் நலச் சங்க மாவட்டச் செயலா் எஸ்.மகேஸ்வரி, மாவட்டப் பொருளாளா் எம்.ஜெயபால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.