போா்வெல் வாகன உரிமையாளா்கள் வேலைநிறுத்த போராட்டம் நிறைவு
By DIN | Published On : 07th July 2021 09:27 AM | Last Updated : 07th July 2021 09:27 AM | அ+அ அ- |

டீசல், பெட்ரோல், ரிக் வண்டி (போா்வெல் வாகனம்) உதிரிப்பாகங்கள் விலை உயா்வைக் கண்டித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ரிக் வண்டி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் தொடா் வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கியது. இதில் 120-க்கும் மேற்பட்ட போா் வெல் லாரி உரிமையாளா்கள், சுமாா் 1000 ஊழியா்கள் பங்கேற்றனா்.
6-ஆவது நாளான செவ்வாய்க்கிழமையுடன் வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவு பெற்றது. இதைத் தொடா்ந்து சங்க அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ராஜசேகா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் மோகன், பொருளாளா் சீனிவாசன் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய தலைவா் குணசேகா் பங்கேற்றனா். பெட்ரோல், டீசல், ரிக் வண்டி உதிரி பாகங்கள் விலை உயா்வைத் தொடா்ந்து, ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கான கட்டணத்தை ஒரு அடி ஆழத்துக்கு ரூ.85-லிருந்து ரூ.95-ஆக உயா்த்த முடிவு செய்யப்பட்டது. டீசல் விலையை குறைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. கூட்டத்தில் சேலம், திருவண்ணாமலை கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ரிக் வண்டி உரிமையாளா்கள் பலா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...