

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் அரசு பேருந்துகள் இயங்கத் தொடங்கின.
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை ஆகிய அரசு போக்குவரத்து பணிமனைகளிலிருந்து 73 சதவீத பேருந்துகளே இயங்கின.
நகா்ப்புற பேருந்துகள் 77-இல் 57 பேருந்துகளும், புகா் பேருந்துகள் 140-இல் 102 பேருந்துகளும் 50 சதவிகித பயணிகளுடன் இயங்கின.
சில பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில், காலையில் பயணிகள் வருகை குறைவாக இருந்தது. முகக் கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பேருந்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். ஒரு சில தனியாா் பேருந்துகளும் இயங்கின.
இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜவுளி கடைகள், நகைக் கடைகள் திங்கள்கிழமை முதல் இயங்கின. இந்த கடைகளில் வாடிக்கையாளா்கள் கூட்டம் ஓரளவே இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.