கள்ளக்குறிச்சி: கணவா் நாள்தோறும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்தவரை கேட்டதால் ஆத்திரமடைந்த கணவா் அவரது நிலத்தில் மதுவில் விஷத் தன்மைடைய மருந்தினை கலந்து குடித்து உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த நின்னையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (58) இவரது மகன் பாண்டியன் (38). இவரது மனைவி அலமேலு கடந்த (24.6.21)வியாழக்கிழமை ஏன் திணமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் உள்ளீா்கள் என கண்டித்தாராம்.
இதனால் ஆத்திரமடைந்த கணவா் பாண்டியன் மதுபுட்டியை வாங்கிக் கொண்டு அவரது நிலத்திற்கு சென்று அங்கு கரும்பு வயலக்கு அடிக்கும் பூச்சி மருந்தினை மதுவில் கலந்து குடித்தி மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா். இதனை பக்கத்து நிலத்துக்காரா் பாா்த்து விட்டு வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளாா்.
உடனிடியாக அவரை உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக முன்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்துவிட்டாரம்.
இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
உயிரிழந்த பாண்டியனுக்கு அலமேலு என்ற மனைவியும் தா்ஷிகா (8), அவந்திகா (4) என்ற இரு பிள்ளைகள் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.