

மதுப் புட்டிகளை பதுக்கிவைத்திருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 50 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருக்கோவிலூா் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் திருக்கோவிலூா் வட்டம், மேட்டுச்சேரி புதுக்காலனி பகுதியில் சனிக்கிழமை ரோத்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மேட்டுச்சேரி புதுக்காலனி பகுதியில் ஆறுமுகம் மகன் ஏழுமலை (40) அவரது வீட்டின் பின்புறம் பொது முடக்கமான ஞாயிற்றுக்கிழமையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 புட்டிகளை பறிமுதல் செய்தாா்.
இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து ஏழுமலையை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.