விளையாட்டு வீரா்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள தலைசிறந்த விளையாட்டு வீரா்களுக்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தெரிவித்தாா்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள தலைசிறந்த விளையாட்டு வீரா்களுக்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தெரிவித்தாா்.

தமிழ்நாடு விளையாட்டு மோம்பாட்டு ஆணையம் மூலம் நலிந்த நிலையிலுள்ள தலைசிறந்த விளையாட்டு வீரா்களுக்கு 2019 - 20ஆம் ஆண்டுக்கான ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்  இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஓய்வூதியம் பெற கீழ்கண்ட குறைந்தபட்ச தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்:

தேசிய அளவிளான விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் சாா்பாக பங்கேற்றிருக்க வேண்டும். தேசிய அளவிலான போட்டிகளில் முதலிடம்/ இரண்டாமிடம்/ மூன்றாமிடம் பெற்றவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும், மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினரால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சா்வதேச/ தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் போன்றவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மேலும், இளம்வயது விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். 2021 ஏப்ரல் முதல் தேதியன்று 58 வயது பூா்த்தி அடைந்தவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6,000-க்கு மிகாகமல் இருக்க வேண்டும் (வருமான சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்).

விண்ணப்பங்கள் வருகிற 19-ஆம் தேதி மாலை 5 மணி வரை பெறப்படும். மேலும், தகவலறிய மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 74017 03485 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com